Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இ-பதிவு கட்டாயம்… அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…வாகனத்தை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை வருவாய் துறையினர் அபராதம் விதித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதி வழியாக வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வாகனங்கள் வந்து செல்வதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 3ஆம் அலையை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை பகுதியில் வருவாய்துறை அதிகரிகம் மற்றும் நகராட்சியினர் சீதக்காதி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது கேரளாவில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள் 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இதனையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் இந்த வாகன சோதனையில் கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் பழனிக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காசிநாததுரை, நகராட்சி ஆணையர் பூபதி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |