கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 7,135 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 49.95% ஆக உள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 1,54,329 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1,45,779 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும், மற்றும் கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவ மேற்பார்வையில் உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 386 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,993 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884 ஆக உயர்ந்துள்ளது.