Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதுக்கி வைத்திருந்த பொருட்கள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது மற்றும் புகையிலையை விற்பனை செய்த 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமிழங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான வீரபுத்திரன் என்பவர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் சுப்புராம் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சோதனை செய்த காவல்துறையினர் சுப்புராமிடமிருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்புராமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து திருத்தங்கள் காவல்துறையினர் சுக்கிரவார்பட்டி பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்பின் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கடைகளில் சோதனை செய்துள்ளனர். அப்போது ராஜகோபாலன் என்பவர் நடத்திவந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த புகையிலையை பறிமுதல் செய்ததோடு ராஜகோபாலனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |