Categories
சினிமா தமிழ் சினிமா

4 நாட்கள்… வசூல் வேட்டை நடத்திய தலைவரின் ‘தர்பார்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

ரஜினியின் தர்பார் திரைப்படம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ரூ 150 கோடியை  கடந்து ஒடிக்கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தை ஏ .ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார் .இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Image result for darbar movie
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி உலகமெங்கும் 7,000 திரையரங்குகளில் வெளியான ‘தர்பார்’ 5 நாட்களில், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடியை வசூலை தந்து சாதனைப் படைத்துள்ளது. இதனை லைக்கா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |