திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட திமுக பொருளாளர் துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொதுக்குழு 29ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற இருக்கின்றது. அதன் அடிப்படையில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக தனது பொறுப்பை விலகுவதாக கடிதம் கொடுத்திருப்பதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
இதனால் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வு வரக்கூடிய 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால் துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பல முறை எம்எல்ஏவாக இருந்தார் , கட்சியின் பொருளாளராக இருந்தார்.
ஒரு மூத்த உறுப்பினராக இருக்கக் கூடிய துரைமுருகன் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு தேர்வாகும் பட்சத்தில் பொருளாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்வு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது . டிஆர் பாலு, பெரியசாமி , ஏவா வேலு உள்ளிட்டோர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.