தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாண். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், வில் அம்பு, இஸ்பேட் ராஜாவும் இல்பட் ராணியும், பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசடதபற, ஓ மணப்பெண்ணே, டீசல், ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறு கோடி வானவில் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய காதலியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். தன்னுடைய காதலியுடன் கைகோர்த்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
To new auspicious beginnings ❤️#HappyVijayadashami #HappyDussehra #HappyAyudhaPooja pic.twitter.com/vN2jwNvbjl
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022