Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையில் சந்தேகம்… கேள்வி எழுப்பிய மூவர் கைது… சீனா அரசு மீது கண்டனம்…!

சீன அரசு பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஏன் தாமதமாக வெளியிட்டது என்று கேள்வி எழுப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

லடாக்,கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த ஆண்டு இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று சீனஅரசு தெரிவித்தது. உயிரிழந்த சீன ராணுவ வீரர்களை இழிவு படுத்தியதாக மூன்றுபேரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புலனாய்வு பத்திரிக்கையாளரான 38 வயதுடைய க்யூ ஜிமிங் என்ற இவர் சீனா அரசு வெளியிட்ட பலி எண்ணிக்கையை கேள்விக்குட்படுத்தி இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்தியா 20 ராணுவ வீரர்களை தாங்கள் இழந்ததாக உடனே அறிவித்த போதிலும் சீனா தங்களது பலி  எண்ணிக்கையை அறிவிக்க தாமதமானது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் இந்தியா வென்றதாகவும் கூறியுள்ளார். ஆகையால் கல்வான் போரில் உயிரிழந்த வீரர்களை இவர் அவமானப்படுத்தி விட்டார் என்ற நோக்கில் இவர் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 25 வயதுடைய நபரும், 28 வயதுடைய நபரும் சீன வீரர்கள் அவமதிப்பதாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையை கேள்வி எழுப்பியவர்களை அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

Categories

Tech |