ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டூயட் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. அந்தப் பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் தான் பாடியுள்ளார். இந்நிலையில், அண்ணாத்த படத்தின் ”சாரா காற்றே” என்ற பாட்டின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இரண்டாவது சிங்கிளின் ட்ராக் வீடியோ இன்று வெளியானது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
#SaaraKaattrae – #AnnaattheSecondSingle is here:
▶️ https://t.co/yFMY34tR6y
@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @sidsriram @shreyaghoshal #Yugabharathi @BrindhaGopal1 @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #Annaatthe— Sun Pictures (@sunpictures) October 9, 2021