Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் கிடைக்கல… இரு மாநில எல்லையில்… தாலி கட்டிய மணமகன்…!!

அதன்பிறகு கல்யாணத்தை  ஜூன் 3ஆம் தேதிக்கு இரு வீட்டினரும் ஒத்திவைத்தனர். அப்போதும் ஊரடங்கு அமலில் இருக்க, எந்தவித தளர்வுகளும் இல்லை.. மேலும் மணமகன் மற்றும் அவரது உறவினர்  தமிழகத்திற்கு வர இ-பாஸ் கிடைக்கவில்லை.. இருப்பினும் நேற்று திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். அதன்படி தமிழகத்திலிருந்து பெண்வீட்டார் கேரளாவிற்கு செல்வதற்காக இ-பாஸ் விண்ணப்பித்திருந்தனர்.. அதில், மணமகளுக்கு மட்டுமே கேரள அரசு அனுமதியளித்தது.

தமிழகத்திற்கு வர மணமகன் வீட்டாருக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. எனவே திருச்சூரிலிருந்து மணமகன் மற்றும் அவருடைய பெற்றோர் தமிழக-கேரள மாநில எல்லையான ஆரியங்காவு சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தனர்.. நெல்லையிலிருந்து மணமகள் தன்னுடைய பெற்றோருடன் சோதனை சாவடிக்கு சென்றனர்.. சோதனை சாவடி அருகிலேயே ஆரியங்காவு அய்யப்பன் கோவில் இருக்கிறது.. அந்த கோவிலின் வாசலில் சாலையில் நின்று கொண்டு மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். இந்த கல்யாணத்தில் இரு வீட்டார் உட்பட மொத்தம் 7 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

Categories

Tech |