தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக நடந்த தகராறில் போலீஸ் உட்பட 3 பேர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தில் ஜெகன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை போலீசாக திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன்(21)என்பவருக்கும் முன்பகை இருந்துவந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் அவரது சகோதரன் சுரேஷ் மற்றும் பாண்டியன் ஆகியோருடன் இணைந்து ஆனைமலையன்பட்டிக்கு சென்றுகொண்டிருந்த பார்த்திபனின் தம்பியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பார்த்திபனும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அவரையும் ஜெகன் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பார்த்திபன் பலத்தகாயம் அடைந்துள்ளார். மேலும் அப்பகுதியாக வந்தவர்கள் பார்த்திபனை தேனி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் போலீசார் ஜெகன் மற்றும் அவரது சகோதர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜெகன் அளித்த புகாரின் அடிப்படையில் பார்த்திபன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.