துபாய் மற்றும் ஜெய்ப்பூருக்கு இடையேயான விமான சேவை விரைவாக தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது, விமான போக்குவரத்து தொடர்பில் வெளியிட்டிருக்கும் தகவலில், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூருக்கு, துபாயிலிருந்து இயக்கப்பட்ட விமான போக்குவரத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஜெய்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, விமான போக்குவரத்தை செயல்படுத்துவதில், தாமதம் ஏற்பட்டது. தற்போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
எனவே, விமான போக்குவரத்து விரைவாக செயல்படுத்தப்படும். இந்திய பயணிகள், அமீரகத்திற்கு செல்ல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால், அதிக பயணிகள் வருகிறார்கள். மேலும், தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியும் தொடங்கவிருக்கிறது.
எனவே, அதிகமான இந்திய பயணிகள் அமீரகத்திற்கு வருகிறார்கள். இதனால், சார்ஜா, அபுதாபி, துபாய், போன்ற பகுதிகளுக்கு, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், விமான சேவை அதிகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.