Categories
உலக செய்திகள்

துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி.. இந்திய அரங்கு குறித்து வெளியான தகவல்..!!

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியானது, வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அரங்கிற்காக 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

துபாயில் கடந்த வருடம் உலக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் இந்த வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் அமீரகம் உட்பட சுமார் 192 நாடுகள் பங்கேற்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து அடுத்த வருடம்  மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கென்று துபாய் முதலீட்டு பூங்காவிற்குரிய பகுதியில் சுமார் 1,080 ஏக்கர் பரப்பளவில்  பல நாடுகளுக்காக அரங்கங்கள் உருவாக்கப்படடுகிறது. இதில் இந்திய அரங்கிற்காக 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  மேலும் 4,800 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படுகிறது.

இந்த இந்திய அரங்கில் வர்த்தகம், பாரம்பரியம், ஆங்கிலத்தில் 5 டிஎஸ் என்னும் கருப்பொருள் திறன், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற ஐந்து அம்சங்கள் கொண்ட காட்சியமைப்புகள் அமைக்கப்படும். இதற்காக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை, பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Categories

Tech |