Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரத்தசோகையை நீக்க உதவும் முருங்கை இலை சூப் !!!

இரத்தசோகையை நீக்க உதவும் சுவையான முருங்கை இலை சூப் செய்யலாம் வாங்க..

தேவையானப் பொருட்கள்:

முருங்கை இலை- 1 கப்

தண்ணீர்-2 கப்

சிறிய வெங்காயம்-10

தக்காளி-1

இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன்

பூண்டு விழுது- – 1 டீ ஸ்பூன

சீரகம்-1/2 டீ ஸ்பூன்

மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்

பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை

நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

முருங்கையிலை க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் முருங்கை இலைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் சீரகம் ,  வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் , முருங்கை இலைகளை சேர்த்து கிளறி உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து  3 விசில் வரும் வரை வேக வைத்து  இறக்கினால் சுவையான முருங்கை இலை சூப் தயார் !!

Categories

Tech |