வெங்காயம் விலை உயர்வை அடுத்து முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது
தென்மேற்கு பருவமழை அதிகமாகப் பொய்த்து வருவதன் காரணமாக கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மிக குறைவாகவே வெங்காய வரத்து கடந்த இரண்டு மாதங்களாக உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சின்ன வெங்காயம் தான் அதிகமாக விளையும்
ஆனால் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு அடுத்து சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது.நவம்பர் மாதங்களில் அவற்றை 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது ரூபாய் 100 முதல் 150 வரை விற்கப்படுகிறது. இரண்டாம்தர வெங்காயம் 150க்கு மேல் விற்கப்படுகிறது. மூன்றாம் தர வெங்காயம் நூறு ரூபாய்க்கு மேல் வற்கப்படுகிறது
இதன் காரணமாக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர் அவர்களை இன்னும் வேதனைப்படுத்தும் விதமாக முருங்கை காய் அதிக விலை உயர்வு ஏற்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் , முகூர்த்த நாள் என்பதால் முருங்கைக்காயின் விலை 650 முதல் 800 வரை விற்கப்படுகிறது.
முருங்கைக்காய் தென் மாவட்டங்களில் இருந்து வரத்து குறைய தொடங்கி இருப்பதால் 300 முதல் 350 வரை விற்கப்பட்டது குறிப்பாக சென்னையில் முருங்கைக்காய் விலை 300 முதல் 350 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயத்தை தொடர்ந்து முருங்கையும் விலை உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய செய்கிறது.அதனால் சாம்பார் வைத்து சாப்பிட ஆசைப்படும் மக்கள் வெங்காயம் முருங்கை இல்லாமல் எப்படி சாம்பார் வைப்பது என்று வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மற்ற காய்கறிகள் விலை கணிசமான அளவுவிலையில் விற்கப்படுகிறது.