பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் எம். புதுப்பட்டி போலீசார் கோத்தகிரி பேருந்து நிறுத்தம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பெட்டி கடையில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் அங்கே இருந்த 150 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக நாகராஜ் மற்றும் முத்து போன்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.