Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டானுங்க… சுற்றி வளைத்த போலீசார்… அதிரடி சோதனையில் சிக்கியவர்கள்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ஆத்துப்பாலம், தண்ணீர்பந்தல், காந்திபுரம், வடகோவை, சங்கனூர் ரோடு போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் அப்பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாதவன், அய்யாசாமி, போஸ், பாண்டியன், சந்திரசேகர், பாண்டியராஜன் மற்றும் சந்தோஷ் போன்ற 7 பேரை போலீசார் கைது செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 78 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர்.

Categories

Tech |