மகன் ஒருவர் குடிபோதையில் தனது தாயை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பகுதியில் வசித்து வருபவர் முத்தம்மாள். இவருக்கு ரத்னவேல் என்ற மகன் இருக்கிறார். மகன் ரத்னவேல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே பல வருடங்களாக தகராறு இருந்துள்ளது. இதனால் ரத்தினவேல் குடிக்கும் போதெல்லாம் தன் தாயிடம் சென்று சண்டையிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் வந்த ரத்தினவேல் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து சண்டை முற்றியதால் தனது தாயை கீழே தள்ளியுள்ளார். இதனால் கீழே விழுந்த முத்தம்மாள் மூச்சு, பேச்சு மூச்சில்லாமல் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் முத்தம்மாளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பெற்ற தாயை மகன் குடிபோதையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.