Categories
உலக செய்திகள்

இஸ்லாமாபாத்தின் இந்திய தூதரகத்திற்குள் ட்ரோன்.. கடுமையாக எதிர்த்த இந்தியா..!!

இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் வளாகத்திற்குள் ட்ரோன் விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லவேளையாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் புதிதாக ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத இயக்கங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரக வளாகத்திற்குள்ளும் ட்ரோன் விடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே  இந்தியா, பாதுகாப்பு விதியை மீறியதாக பாகிஸ்தானிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |