Categories
உலக செய்திகள்

ட்ரோன் தாக்குதலில் எண்ணெய் டேங்கர்கள் வெடிப்பு…. இந்தியர்கள் உட்பட மூவர் பலி….!!!

அபுதாபியில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 எண்ணெய் டேங்கர்கள் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கிருந்த எண்ணெய் நிறுவனத்திற்குரிய கிடங்கில் 3 எரிபொருள் டேங்குகள் தீப்பிடித்து எரிந்தது.

இதில் இந்தியாவை சேர்ந்த இருவர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு, ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

Categories

Tech |