Categories
தேசிய செய்திகள்

ஒரு டம்ளர் தண்ணீரை குடித்ததற்காக…. இப்படியா பண்றது… மாற்றுத்திறனாளிக்கு நடந்த கொடூர சம்பவம்…!!!

ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து குடித்த மாற்றுத்திறனாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம்,  பெகுசராய் என்ற மாவட்டத்தில்,பேதுபுரா என்ற கிராமத்தை சேர்ந்த சோட் லால் சஹானி. இவர் ஒரு மாற்றுத் திறனாளி. சம்பவர் தினத்தன்று சோட் லால் தனது கிராமத்திற்கு அருகில் இருந்த குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து மீன்பிடித்து விட்டு வீடு திரும்பும் போது தாகம் ஏற்பட்டதால் தினேஷ் சஹானி என்பவரின் வீட்டிற்கு முன்னால் தண்ணீர் பானையில் இருந்து ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் குடித்துள்ளார். அவர் குடித்ததை பார்த்த தினேஷ் மற்றும் அவரது மகன்கள் இருவரும் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவரை கிராம மக்கள் சேர்ந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அவரது உடல்நிலை மோசமான காரணத்தினால் அவரது மனைவி அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாத காரணத்தால் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து உதவி செய்துள்ளனர். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே அவரை அடித்த தினேஷ் சஹானியை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு டம்ளர் தண்ணிகாக ஒரு மாற்றுத்திறனாளியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |