Categories
மாநில செய்திகள்

“ஜோலார்பேட்டை to சென்னை” நாளை முதல் குடிநீர் விநியோகம்….முதல்வர் அறிவிப்பு..!!

நாளை முதல் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும் என்று சட்ட பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்துள்ளார்.

சென்னையில்  குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம்  ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக  ரூ65 கோடி  ஒதுக்கப்பட்டது.  இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர்  ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது.

Image result for eps admk

இதனை தொடர்ந்து  ரயில் புறப்பட தயாராகி வரும் நிலையில் தலைமை செயலகத்தில்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதன் பின் சட்ட பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டம் குறித்து பேசினார். அதில்,  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னைக்கு நாளை முதல் ஜோலார்  பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |