தூதுவளை சூப்
தேவையான பொருட்கள் :
தூதுவளை – 1 கைப்பிடி
மிளகு தூள் – 1 ஸ்பூன்
புளி – நெல்லிக்காயளவு
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 3
பெருங்காயம் -சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பருகி வந்தால் சளி அண்டவே அண்டாது..