மதுபானம் அருந்துபவர்கள் அளவாக குடித்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. துறைசார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி MLA பிரின்ஸ் கூறுகையில் , மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதால் உயிரிழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி , மதுபானம் அருந்துபவர்கள் அளவாக குடித்தால் எந்த பிரச்சினையும் இல்லை. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என்று கூறினார்.