Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!

கேன்களில் அடைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான ஒழுங்குமுறை சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா, சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரபிரபு தலைமையில் நடைபெற்றது . தலைவர் அனந்தநாராயணன், அன்பு, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், உணவு தரக்காட்டுப்பாட்டு ஆணைய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசுகையில், புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒழுங்குமுறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் கேன்களை கண்டிப்பாக மூடியிட்டும் சீலிட்டும் விற்பனை செய்ய வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், நிறுவனத் தலைவர் ராஜாராம், சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், ஷேக்ஸ்பியர், பாலசுப்ரமணியன், ஆடிட்டர் முரளி, பொதுச்செயலாளர் சரவணன், பொருளாளர் கலீல், செயற்குழு உறுப்பினர் சுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்களை உணவு மற்றும் குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஆய்வாளராக நியமிக்க வேண்டும் என்கிற அரசின் கோரிக்கை நியாயமானது.

அதற்குரிய கால அவகாசத்தை தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வழங்க மத்திய மாநில அரசை கேட்டுக்கொள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகிட மானிய உதவியுடன் கூடிய கடனுதவி திட்டங்கள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Categories

Tech |