கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கண் பார்வைத் திறனை மேம்படுத்தவும் அருந்த வேண்டிய பானம்.
தேவையான பொருட்கள்
குங்குமப்பூ – 1 கிராம்
தண்ணீர் – 1 கப்
தேன் – தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.
- கொதிக்கும் பொழுது குங்குமப்பூவை அதில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
- ஆறிய பின்னர் தேவைக்கேற்ப தேன் சேர்த்தால் குங்குமப்பூ டீ தயாராகிவிடும்.
குங்குமப்பூ டீ தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால் கண்பார்வை தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் விலகிவிடும்.
இந்த குங்குமப்பூ டீ பார்வையை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவிபுரிகிறது.
மூட்டுவலியை குணப்படுத்தும் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கவும் இது துணை புரிகிறது.