Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் வாக்குவாதம்…. முற்றிய குடும்பத்தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நூர்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலாவதி என்கின்ற சஸ்லின் என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் இடையே சில நாட்களாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பின் தகறாராக மாறியுள்ளது.

இதனால் மனவேதனையடைந்த கலாவதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கலாவதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |