மது அருந்த மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவணபள்ளி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் தன் மனைவியிடம் சென்று கேட்டுள்ளார். அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். குடும்பத்தினரும் பணம் கொடுக்க மறுத்ததால் குமார் மன உளைச்சலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார்.
உயிருக்கு போராடிய நிலையில் இருந்த குமாரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து தேன்கனிக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.