Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிட மாடல் துருப்பிடிச்சு வெளியே தெரிகிறது – சம்பவங்களை சொல்லி சீமான் விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.க தலைவர் வீரமணி ஐயாவிற்கு காசு கஷ்டம்,  அதெல்லாம் பிரச்சனை  இல்லை. ஒருவர் எடை குறைகிறது என்று முட்டிக்கால் வைத்து அழுத்தினார் அல்லவா அதுதான் திராவிட மாடல்.ஒரு நரிக்குறவ பெண் ஐயா ஸ்டாலின் சென்று ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை அடுத்து, அந்த பெண் சொல்லியது அல்லவா….

இந்த  அட்டையை கொடுத்தாங்க, அதோட வாங்கிக் கொண்டு போயிட்டார்கள். ஒரு லட்சம் ரூபாய் தாரேன் என்று சொன்னார்கள்,  தரவில்லை. கடை வைக்கணும் என கேட்டால், நாடோடி மாதிரி தெருவில் திரிகிறபவர்களுக்கு கடை ஒரு கேடா என்று பேசுகிறார்கள், ஐயோ என்று விட்டுப் போய் விட்டார்கள் என்று அந்த பெண்மணி சொல்கிறார். அதுதான் திராவிட மாடல். ஒன்று துருப்பிடித்து வெளியே தெரிகிறது. அது போல் நிறைய தெரியவரும் என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |