Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனோ….. 14 நாளில்….. ரூ14,00,00,000….. ஈசனுக்கு நன்றி….. வைரலாகும் ட்விட்….!!

திரௌபதி பட வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கும், ஈசனக்கும் நன்றி என் தெரிவித்துள்ளார்.

நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும் திரௌபதி திரைப்படம் வெளியான நாள் முதல் 18 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது. அதன்பின் கொரோனோ எதிரொலியால் அந்த படம் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு பின், திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் 18 நாளில் ரூபாய் 14.58 கோடி வசூலாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாளில் இதுகுறித்து தயாரிப்பாளர்களும், படக்குழுவினரும் ஆங்காங்கே தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் சூழலில் திரௌபதி பட இயக்குனர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், குறிப்பிட்ட காலத்தில் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்ததற்கு உங்களுக்கும் ஈசனுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |