Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

டாக்டர் லீவு…. பிரசவம் பார்த்த NURSE….. தாய்-சேய் மரணம்…. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை….!!

திருப்பத்தூரில் மருத்துவரிடம் செல்போனில் பேசிக் கொண்டே செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய் சேய் உயிரிழந்தது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆரீஃ ப் நகரைச் சேர்ந்தவர்  இம்ரான். இவரது மனைவி பரிதா என்பவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றெடுத்த சில மணிநேரங்களிலேயே பரிதா உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து காவல்துறையினர்  அன்று மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர், செவிலியர், ஊரக நலப் பணி இயக்குனர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லாததால் செல்போனில் மருத்துவர்களை தொடர்பு கொண்டு பரிதாவிற்கு பிரசவம் பார்த்தது தெரியவந்தது. இதனால் தான் அவர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

இதேபோல நாமக்கல் தனியார் மருத்துவமனையில் ரேவதி என்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவரும் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஊரக நலப்பணிகள் இயக்குனர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த இரண்டு வழக்கையும் விசாரணைக்கு  நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |