Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த் போஸ் நியமனம்…. இன்று பதவியேற்பு….!!!!!

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கடந்த 17-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்தார்.

அதன்படி டாக்டர் சிவி ஆனந்த் போஸ் என்பவர் மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், கொல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி ராஜ் பவனில் நடைபெற்றது. இதனையடுத்து நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, சபாநாயகர்‌ பிமன் பானர்ஜி, மாநில அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சிவி ஆனந்த் போஸ் மேகாலயா மாநில அரசின் ஆலோசகராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |