Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் ரிலீஸ் … தனுஷுடன் மோதும் சந்தானம் … எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகர்கள் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

நீண்ட இடைவெளிக்குப் பின் திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் முன்னணி நடிகர்களின் படங்களும் வரிசையாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன . அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

பாரிஸ் ஜெயராஜ், ஜகமே தந்திரம் பட போஸ்டர்கள்

இந்நிலையில் அதே நாளில் நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படமும் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை A1 பட இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ளார் . ஒரே நாளில் தனுஷ், சந்தானம் படங்கள் ரிலீஸாக இருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |