Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த சேட்டை வேணாம்….! என்கிட்ட மோதாதீங்க..! மரியாதை வச்சு இருக்கேன்… ”தம்பி” என சீமான் கிண்டல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எனக்கு வாய்க்கொழுப்பு அவர்களுக்கு ( முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ) பணக்கொழுப்பு எந்த கொழுப்பு இப்போது தேவைப்படுகிறது? ஜெயக்குமார் மேல மரியாதை வைத்திருக்கிறேன். அதை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்னிடம் மோதக்கூடாது, இழப்பதற்கு எதுவும் இல்லை.

இல்லாதவரிடம் வார்த்தையை கொடுக்கக் கூடாது என்று ஹிட்லர் கூறியுள்ளார். என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை, உங்களிடமும் இல்லை அது வேற. நீங்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து பணம் வைத்துள்ளீர்கள். என்னை எதிர்த்து பேசும் நீங்கள் பிஜேபியை எதிர்க்க முடியுமா? காலையில் ரைட் வந்துவிடும், என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் கிடையாது உயிரைத் தவிர ஒன்றும் கிடையாது.

பேசுறதுக்கு ஆள் இல்லை, ஸ்டாலின், பிஜேபியை பேசினால் நாளை அவர் வீட்டுக்கு சோதனை வரும். என்னை பேசினால் நான் மதிக்கிறேன் பேசிட்டு போகட்டும். கடும் விளைவுகளை சந்திப்போம். ஒரு இடம் சொல்லுங்க நானும் வரேன்,  இரண்டு பேரும் சந்திப்போம். யாருக்கு விளைவு வருகிறது என்று பார்க்கலாம் ? தம்பி இந்த சேட்டை வச்சுக்க கூடாது என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |