Categories
தேசிய செய்திகள்

யாரையும் நம்பக்கூடாது….! ”களமிறங்கிய இந்தியா” வியப்பில் உலகநாடுகள் …!!

இந்தியாவுக்கு சீனா அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தரமற்றவை என்ற புகார் உலகழிவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே தனது பிடியில் சிக்க வைத்துள்ளது. தினமும் கொத்துக்கொத்தாக பாதிப்பும், கொத்து கொத்தாக மரண ஓலமும் கேட்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டி, 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் உச்சக்கட்டத்தில் உள்ளது. அங்கு மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம்:

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகலே அவசியம் என்பதை உணர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு பிறப்பித்து, மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 934 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை  நெருங்கி வருகிறது.

சீனாவில் இருந்து கொள்முதல்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகளவு சோதனை நடத்த வேண்டிய தேவை மாநில அரசாங்கங்களுக்கு உள்ளதனை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் என்ற துரித பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்தது. சீனாவிலிருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

தடை போட்ட ராஜஸ்தான்:

ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை பல மாநிலங்கள் சரியான முடிவுகளை சொல்லவில்லை, தவறான முடிவு காட்டுகின்றது என்று விமர்சனங்கள் எழுந்தன. 80 சதவீதத்துக்கும் அதிகமாக தவறான முடிவையே ரேபிட் டெஸ்ட் கொடுப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்த ராஜஸ்தான் மாநில அரசு ரேபிட் டெஸ்ட் நடக்கப்போவதில்லை என்று தடை போட்டது.

தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட்டுகள்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை வைத்து மாநில அரசுகள் கொரோனா பரிசோதனை நடத்தவேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதே அதோடு இல்லாமல் சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட் தரமற்றவையாக உள்ளது என்று அந்நாட்டு நிறுவனத்துக்கு முறையீடு செய்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.

The India of Narendra Modi Vs The China of Xi Jinping - TFIPOST

மறுத்த சீனா:

இதனிடையே இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொடுத்த சீன நிறுவனம் இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, இந்தியாவின் விசாரணையையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றோம். இந்தியாவின் விசாரணைக்கு ஒத்துழைப்போம். இந்தியாவின் குற்றசாட்டு வேதனை அளிக்கின்றது என்று தெரிவித்தது.

களமிறங்கிய இந்தியா : 

இந்த நிலையில்தான் இந்திய அரசு இனிமேலும் யாரையும் நம்பினால் வேலைக்கு ஆகாது என்று ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியாவிலே உற்பத்தி செய்யும் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதிப்படுத்தியுள்ளார். அதில், ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்த பிறகு ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிப்பு பணிகள் தொடங்கும். ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மே 31ம் தேதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் மருத்துவத்தை உலக நாடுகள் வியப்பில் பார்க்கின்றனர்.

Categories

Tech |