Categories
தேசிய செய்திகள்

அனுமதிக்காதீங்க….. ”இந்து அமைப்பு புத்தகம் கிழிப்பு”… அயோத்தி வழக்கில் பரபரப்பு …!!

அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்து எறிந்தது நீதிபதிகளை அதிச்சியடைய வைத்துள்ளது.

அயோத்தி வழக்கில் கடந்த 40 நாட்களாக விசாரணை நடைபெற்று  வந்த நிலையில் கடைசி நாளான இன்று இந்து மற்றும் முஸ்லீம் இரண்டு அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடைசிநாள் என்பதால் மிக காரசாரமான வாதங்களாக இருந்தது.  இந்து மகாசபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிஷோர் குணால் மிக முக்கியமான புத்தகத்தை ஆதாரமாக சமர்ப்பித்தார். நீதிபதிகளிடம் கொடுத்துவிட்டு அதை எதிர் தரப்பான இஸ்லாமிய அமைப்புகளிடமும் கொடுத்தார்.

உடனடியாக அதற்கான எதிர்வினையாக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் அதனை கிழித்தெறிந்தார். மிகவும் ஆக்ரோஷமான முறையில் அவர் நடந்துகொண்டதால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் கடைசி நாள் ஆதாரத்தைக் கொண்டு வந்தால் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு கடைசி நாளில் இப்படி கொடுக்கக் கூடிய ஆதாரங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோபமாக இருந்தால்மிகவும் சத்தமான முறையில் தன்னுடைய வார்த்தைகளை உபயோகப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அதிருப்தி அடைந்து வழக்கறிஞர் நீதிமன்ற மரபை பின்பற்றாமல் இப்படி நடந்து கொண்டால் நாங்கள் அனைவரும் எழுந்து சென்று விடுவோம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் கொடுக்கக்கூடிய எழுத்துபூர்வமான வாதங்களை வைத்து மட்டும் எங்களால் தீர்ப்பு வழங்க முடியும். இப்படி நீதிமன்றத்தில் உயர்த்தி பேசுவதாலோ , இது போன்ற செயலில் ஈடுபடுவதால் எந்தவிதமான நன்மையும் ஏற்படப் போவதில்லை. அது நீதிமன்றத்தின் நேரத்தை பாதிக்கத்தான் செய்யும் இது மாதிரியான விஷயங்களை நீதிமன்றத்தில் அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்கள். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |