Categories
அரசியல் மாநில செய்திகள்

சாக்கடையிடம் பேசக்கூடாது…! பிணத்தை வச்சு அரசியல் செய்யுறாங்க… பாஜகவை டார்டாராக கிழித்த பிடிஆர்..!!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு தியாகியை அடக்கம் செய்யும்  நாள் இன்று ( 13.08.2022). இன்றைக்கு அவரின் உடல் வரும் என்று அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்த காத்திருக்கின்றோம். நான் லட்சுமணனின்  கமாண்டர், லெப்டினல் ஜெனரலோடு முதலமைச்சருடைய அறிவுரையில்படி தினமும் பலமுறை தொடர்பு கொண்டு எப்போது மதுரை வருவார்கள் என்று மரியாதை செலுத்த காத்திருந்தோம்.

இன்றைக்கு ( 13.08.2022) உடல் வந்தது மரியாதையை செய்திருக்கிறோம். பிணத்தை வைத்து அரசியல் செய்கின்ற சாக்கடை அரசியல்வாதிகளிடம் நான் பேச்சுவார்த்தை எல்லாம் வைக்கிறதுக்கு இல்லை. மேலும் இதுபற்றி பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை. இன்னைக்கு ( 13.08.2022) அவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மரியாதை செய்வோம். நாளைக்கு ( 14.08.2022) பேச வேண்டியது எல்லாம் பேசுவோம். யாரு பிணத்தை வைத்து அரசியல் செய்ய வந்தாங்கன்னு தெரியும். இதுபற்றி நாளை ( 14.08.2022) பேசுவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |