Categories
அரசியல் மாநில செய்திகள்

PTRஎதுவும் பேச வேண்டாம்..! அரசுக்கு கெட்ட பெயர் வருது… கண்டிஷன் போட்ட ஸ்டாலின்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  நிதி அமைச்சர் பேசக்கூடாது என்று சொன்னதாக ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன், அவர் அரசு ஊழியர்களை, பொதுமக்கள் கொடுக்கின்ற மானியங்கள் எல்லாம் கொடுக்கக் கூடாது என்றும் சொல்வது போல பேசுகிறார் என்ற அடிப்படையில்,  இதுபோல் பேசுவது மூலமாக அரசுக்கு கெட்டபெயர் வரும் என்று அவருக்கு தடை விதித்திருக்கின்ற மாதிரி கேள்விப்படுகிறறேன்.

அது  உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் தேர்தல் அறிக்கையில், இது போன்ற பாவப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் கொடுப்போம், குடும்பத்திற்கு…  இந்த வசதி இருக்கிறவர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்ற எந்த அறிவிப்பும் தேர்தல் வாக்குறுதியில்  கொடுக்கவில்லை..

இதே மாதிரி தான் 48 லட்சம் விவசாயிகளுக்கு, பலதரப்பட்ட ஏழை மக்கள்… இதுபோல் ஐந்து பவுன் நகையை உடனே வையுங்கள். எங்க அப்பா தான் முதலமைச்சராக வருகிறார், தலைவர் தான் முதலமைச்சராக வருகிறார் என்று சொல்லி,  ஐந்து பவுன் நகைக்கு உங்களுக்கு உடனே தள்ளுபடி கிடைத்துவிடும் என்று சொன்னார்கள்.

கடைசியில் அதை எடுத்து 13 லட்சம் ஆக்கி, இன்றைக்கு 35 லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் வைத்து அடமானம் வைத்து,  நகையை திருப்ப முடியாமல் இருக்கிறார்கள். அதே போல் ஆயிரம் ரூபாய் கொடுப்பதிலும் 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு நாங்கள் கொடுப்போம் என்று சொன்னார்கள். அதை நிறைவேற்ற வேண்டும் நிறைவேற்றவில்லை என்றால்…

எங்கள் பொது செயலாளர் நிச்சயமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளை அழைத்து அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையாக  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார்கள்; இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி நம் நிதி அமைச்சர்… அரசு ஊழியர்களை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார் என்று சொல்லி பல அமைப்புகள் எல்லாம் அவருக்கு எதிராக கருப்பு பேரணி நடத்துவார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |