செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு கோடி தொண்டர்களும், லட்சோப லட்சம் இளைஞர்களும் மகிழ்ச்சி கடலில்… மிகப்பெரிய உற்சாகத்திலே ஈடுபட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
உதயநிதி அண்ணாமலை கடுமையாக விமர்சனம் எழுப்பியது குறித்த கேள்விக்கு, அரசியல் என்னும் கல்விச்சாலையில் மழலை பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற நபரை பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அரசியலுக்கு வந்து எத்தனை வருஷம் இருக்கும் நீங்க சொல்லக்கூடிய நபர். அதாவது ஆரம்பப் பள்ளி என்று கூட சொல்ல முடியாது. பாஜக மழலையர் பள்ளி. அந்த பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எவ்வளவு வார்டு ஜெயித்தார்கள். ஒரே ஒரு கருத்தை சொல்றேன்..
இல்லாத நபரை இருப்பதாக ஏன் காட்டுகிறீர்கள் ? இல்லாத இயக்கத்தை… இல்லாத ஒரு கட்சியை…. ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தா மட்டும் பத்தாது. இங்கே எத்தனை வார்டு ஜெயிச்சாங்க. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்… எத்தனை நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளை கைப்பற்றினாங்க.
எத்தனை சதவீதம் வாக்குகளை வாங்கினாங்க. இல்லாத ஒரு நபரை இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டு இருக்கணும். உதயநிதி அமைச்சரானது எங்களுக்கெல்லாம் ஒரு திருநாள், பொன்னால்…. மகிழ்ச்சிக்குரிய நாள். எனவே நாம் சேர்ந்தே மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என தெரிவித்தார்.