கட்சியில் இருந்து விலகி செல்வோரை தடுத்து நிறுத்த முடியாது என்று அமமுக கட்சி பொதுச்செயலாளர் ttv தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ttv தினகரன் கூறுகையில், கட்சியில் இருந்து விலகி செல்ல நினைப்போரை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.