Categories
அரசியல் மாநில செய்திகள்

பூச்சாண்டி காட்டாதீங்க..! கருணாநிதி தூக்கி போட்டுட்டாரு…! அதை கண்டிப்பா எடுங்க… சீமான் அரசுக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டநாதன் அறிக்கையை, அம்பாசங்கர் அறிக்கையை செயல்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்   எம்ஜிஆர் அவருக்கு பின்னால் அலெக்சாண்டர் ஆளுநராக இருக்கும்போது, வெங்கட கிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தார்கள்.அதை ஐயா கருணாநிதி வந்தவுடன் தூக்கி போட்டது எதற்கு ?

ஜாதி கணக்கெடுப்பு எடுத்தால் தமிழர் அல்லாதவன் இந்த நிலத்தில் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள், பயன்பாடு அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்துவிடும்.  தமிழின மக்கள் கொந்தளித்து விடுவார்கள், அதனால் நீங்கள் எங்களை எடுக்க மாட்டேங்கறீர்கள். கணக்கெடுப்பு எடுத்துவிட்டு உங்களுக்கு அரை விழுக்காடு என்று சொன்னாலும், எங்களுக்கு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு போகிறோம்.

குயவர், முடி திருத்துபவர்கள், சலவை தொழிலாளி என எல்லோருக்கும் கணக்கீடு எடுங்கள், அதன் பிறகு சொல்லுங்கள்.உங்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு இருக்கிறது என்று ? எவ்வளவு காலத்திற்கு ஏமாற்றுவீர்கள், எங்கள் பாட்டன்,தாத்தா, அப்பா ஏமார்ந்து இருக்கலாம். நாங்கள் அப்படி விட்டுப் போவதாக இல்லை, முடிவு இல்லையென்றால் விடிவு, இதில் ஏதாவது ஒன்றை பார்த்து விட்டு தான் போவோம்.இதில் பூச்சாண்டி காட்டுவதற்கு இல்லை, ஜாதி கணக்கெடுப்பு எடுத்து தான் ஆகணும் என தெரிவித்தார்.

Categories

Tech |