Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு எந்த தடையும் போடல”…. வாய்க்கு வந்தபடி பேசுறாங்க….. சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா தரமான பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருவதோடு, புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் காந்தாரா படத்தை பார்க்க வில்லை என்று விமான நிலையத்தில் போகிற போக்கில் சொன்னது கன்னட சினிமாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு படங்களில் நடிப்பதற்கு தடை போட வேண்டும் என பல பிரச்சினைகள் கிளம்பியது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ராஷ்மிகா தன்னை பற்றி பரவும் தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, நான் காந்தாரா படத்தை பார்த்து விட்டேன். அதோடு பட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன். காந்தாரா படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் என்னால் படத்தை பார்க்க முடியவில்லை. வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் பேசட்டும். அவர்களுக்கு உண்மை தெரியாது. எனவே அதைப் பற்றி கண்டுகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சினிமாவில் ஏதாவது குறைகள் இருந்தால் சொல்லுங்கள். நான் திருத்திக் கொள்கிறேன். ஆனால் என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசுபவர்கள் பற்றி என்னால் கண்டுகொள்ள முடியாது. மேலும் எனக்கு இதுவரை எவ்வித தடையும் போடவில்லை என்று கூறியுள்ளார் ‌

Categories

Tech |