மலிவான அரசியல் செய்வதை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனையை ஆய்வு நடத்தினார்கள். எல்லாமே நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். இது ஒரு பேரிடர் நேரம், அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இந்த தொற்றை ஒழிக்க உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடுகள் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை உடனுக்குடன்சிறப்பாக எடுத்து வருகின்றார்.
மருத்துவர் மரணம் அடைந்து இருப்பது அரசின் அலட்சியம் என்று சொல்லி மலிவான அரசியல் செய்வதை தயவு செய்து எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும். இது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. ஆந்திர மாநிலம் தமிழகத்தை விட அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை வாங்கியுள்ளது. ஆனாலும் அங்குள்ள எதிர்க்கட்சிகள் பாராட்டை தெரிவித்துள்ளது
ஒரு மருத்துவம் என்பது ஒரு மகத்தான பணி, போற்றத்தக்கது. உயிரிழந்தவர்கள் உடல் மீது கிருமிநாசினி செலுத்தி, ஊழியர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு உபகரணம் கொடுத்து அடக்கம் செய்யும்போது எந்த விதத்திலும் வைரஸ் பரவாது. சில விஷமிகள் வதந்திகளை பரப்புவதை நம்ப வேண்டாம். மருத்துவர் உடலை அடக்கம் செய்யாமல் தடுத்த 20 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.