வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டதை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சில தினங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து இவ்வழக்கில் பத்திரிகையாளர், அரசியல் பிரமுகர், காவல் அலுவலர் போன்ற பலர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே கடுமையான உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த போராட்டத்தில் எண்ணற்ற பெண்கள் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கலந்து கொண்டனர்.