பேங்க் ஆப் பரோடோ வங்கி இலவச வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சேவையில் வங்கு அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் எண் மூலம் வங்கிக் கணக்கு இருப்புத்தொகை பேலன்ஸ், கடைசி பரிவர்த்தனைகள் (Mini Statement), காசோலை நிலை (Cheque Status), காசோலை கோரிக்கை (ChequeBook Request), டெபிட் கார்ட் ப்ளாக் வசதிகள், ஆஃபர்கள் உள்ளிட்ட அத்தனை வங்கி சார்ந்த சேவைகளையும் வாட்ஸ்அப் மூலமாகவே பெற முடியும். கஸ்டமர் ஐடி, ரிஜிஸ்டர் மொபைல் ஐடி, வங்கி சார்ஜஸ், வட்டி விகிதம் உள்ளிட்டவை குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.
8433 888 777 என்ற எண்ணுக்கு என டைப் செய்து அனுப்பவும். இது வங்கியில் பதியப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து அனுப்பவும். இதன் மூலம், தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா வங்கியின் சேவைகளைப் பெறலாம். அல்லது 8433 888 777 என்ற எண்ணை உங்கள் காண்டெக்ட் லிஸ்டில் சேவ் செய்துகொள்ளவேண்டும். அல்லது கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து சாட் பகுதியில் உங்களுக்கான கோரிக்கையை பதிவிடலாம்.
https://api.whatsapp.com/send/?phone=918433888777&text=Hi&app_absent=0
இதேபோல அண்மையில் ஐசிஐசிஐ வங்கியும் வாட்ஸ் அப் சேவையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.