திருமணத்தை விரும்பாத காதலன் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் என்ற பகுதியை சேர்ந்த டீனா என்ற பெண் ஜிதின் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். முதலில் அவர் திருமணத்திற்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து தொல்லை தந்ததால் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு டீணாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோரிடம் சென்று விஷயத்தைக் கூறவே, அவர்கள் கல்யாண பத்திரிக்கை முதல் திருமண மண்டபம் வரை அனைத்தையும் ஏற்பாடு செய்தனர்.
திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அவரது காதலியின் டீனாவை சேலை எடுக்க வருமாறு அழைத்துள்ளார். அதையும் நம்பி சென்ற அந்த பெண்ணை ஒரு இடத்தில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வீட்டிற்கு வந்த அவரிடம் டீனா எங்கே என்று கேட்டபோது அவர் முதலில் பதில் சொல்லவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் டீனா பிணமாக ஓரிடத்தில் கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு சென்று அவரை மீட்ட டீனாவின், குடும்பத்தினர் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணை கொலை செய்த ஜிதினை காவல்துறையினர் கைது செய்தனர்.