ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி பல்வேறு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
தமிழ்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. 120க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளநிலையில் ஒருவர் உயிரிழந்து 6 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்கு சமூக விலகலே முக்கியம் என்பதால் மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
மத்திய மாநில அரசின் உத்தரவுகளை மீறி ஆங்காங்கே சுற்றியவர்கள் மீதும் காவல்த்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில்பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதில் கொரோனவை குறைத்து மதிப்பிட்டால் தான் வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக பாதித்துள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தால் நாம் மறைமுகமாக இருப்பதே விவேகமானது என்பதை உணரவேண்டும்.
தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தாலும் வரும்காலம் கடினமாக இருக்கும். வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸ் வேகமாக பரவும். ஊரடங்கை மீறி நடமாடுவோருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார்.