Categories
உலக செய்திகள்

“இத மட்டும் செய்யாதீங்க!”….. விடுமுறை நாட்கள் வருது…. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்….!!

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினரான Gary Anandasangaree என்ற இலங்கைத் தமிழர்  மது போதையில் வாகனங்களை இயக்காதீர்கள் என்று ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

கனடாவில் இரண்டு மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் லிபரல் கட்சி சார்பாக தேர்தலில் களமிறங்கிய Gary Anandasangaree என்ற இலங்கைத் தமிழர், வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் மது போதையில், வாகனம் இயக்குவது தவறு என்று ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதில், நான், Scarborough-Rouge Park என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். “அனைவருக்கும் நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்காதீர்கள். விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே, எந்த ஒரு சூழ்நிலையிலும் மதுபோதையில் வாகனத்தை இயக்க வேண்டாம். பாதுகாப்புடன் இருப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |