இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களை நீக்க வேண்டும். இதனால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகின்றனர் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தியுள்ளதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். தேசிய மக்கள் நிறுத்திவைத்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். மேலும் என்.பி.ஆருக்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். என்.பி.ஆர் விவகாரத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது, பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம். உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.