பெண் ஒருவர் காதலை ஏற்க மறுத்ததால் இளைஞன் ஒருவன் பெண்ணை சுட்டு விட்டு, தானும் சுட்டு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேவ்கினந்தன்புரா கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் பிரியங்கா. அவரது உறவினர் கன்ஷ்யம். பிரியங்காவிற்கு திருமணம் ஆன நிலையில் அவரின் உறவினரான கன்ஷ்யம் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பிரியங்காவை சந்திக்க அடிக்கடி வீட்டிற்கு சென்றதால் பிரியங்கா குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இனிமே வீட்டிற்கு வர வேண்டாம் என்று அவரை பிரியங்கா கண்டித்துள்ளார். இதனால் அவர் மிக மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இதற்கு முடிவு கட்ட தீர்மானத்தை பிரியங்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்ஷ்யம்மை சந்திக்க சென்றார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. தன்னை பார்க்க இனி வராதே என்று கூறியதால் ஆத்திரமடைந்த கன்ஷ்யம் பிரியங்காவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டார். இதில் பிரியங்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த கன்ஷ்யமமை பொதுமக்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
உயிருக்கு போராடி வரும் கன்ஷ்யம் இடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருதலையாக ஒரு பெண்ணை காதலித்ததால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் போன் செய்து தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.