லண்டனில் இருக்கும் சீன தூதரகத்தை வேறு இடத்திற்கு மாற்ற இஸ்லாமியர்கள் மறுப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன இஸ்லாமியர்கள் சீன அரசால் கொடுமைப் படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சீன அரசு இதனை உறுதியாக மறுத்தது. அது மட்டுமல்லாமல் உய்குர் இன இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை குறைக்க அங்கு பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதனையும் சீன அரசு மறுத்தது. இந்நிலையில் ஆதாரத்துடன் அறிவிப்பு ஒன்றை சீன அரசு வெளியிட்டது.
அதில் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் உய்குர் இன இஸ்லாமியர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருப்பதாகவும் அதில் அவர்கள் வசதியாக வாழ வழி செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை சர்வதேச ஊடகங்களும் உறுதிப்படுத்தினர். இதனால் உய்குர் இன மக்களின் பிரச்சினை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் சீன தூதரகம் அமையப்பெற்றுள்ளது. அதனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைனாடவுனாக இருந்த பகுதிக்கு மாற்றுவதற்கு சீன அரசு முடிவெடுத்துள்ளது.
அப்பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் உய்கூர் இஸ்லாமியர்கள் போல் இவர்களும் கொடுமைப்படுத்த படுவார்கள் என்று லண்டனை சேர்ந்த இஸ்லாமியர்கள் பயம் கொள்கின்றனர். இதனால் சீன தூதரகம் இவர்களது குடியிருப்பின் அருகே அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியரான அப்பகுதி கவுன்சிலர் சீன அரசின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .இதனால் இந்த விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் அதிருப்தி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.